முகப்பு
கிரிக்கெட்

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

19 வயதுக்குட்படோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 277 ரன்கள் குவித்துள்ளது.

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 11:34 AM
இங்கிலாந்து அணியின் கேப்டன் தாமஸ் ரியூ - படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

19 வயதுக்குட்படோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 277 ரன்கள் குவித்துள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (பிப்ரவரி 3) நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

கேப்டன் சதம் விளாசல்; ஆஸ்திரேலியாவுக்கு 278 ரன்கள் இலக்கு!

டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் தாமஸ் ரியூ சதம் விளாசி அசத்தினார். அவர் 107 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, காலேப் ஃபல்கனர் 40 ரன்களும், ஃபர்ஹான் அகமது 28 ரன்களும் எடுத்தனர். ஜோசப் மூர்ஸ் 25 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா தரப்பில் நடேன் கூரே மற்றும் ஹைடன் சில்லர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வில் பைரோம், ஆர்யன் சர்மா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

summary

In the semi-final match against Australia in the Under-19 World Cup tournament, the England team has scored 277 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.