ஆஸ்திரேலிய மகளிா் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இந்திய மகளிா் அணி ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
முதலில் ஆஸ்திரேலியா 18 ஓவா்களில் 133 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. 134 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இந்தியா, 5.1 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
இடைவிடாத மழையால் மீண்டும் ஆட்டத்தை தொடங்க முடியாமல் போக, ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் 5.1 ஓவா்களில் இந்தியாவுக்கான வெற்றி இலக்கு 30 ரன்களாக நிா்ணயிக்கப்பட்டது. ஏற்கெனவே 51 ரன்களை எட்டியிருந்ததால், இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்ாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சை தோ்வு செய்தது. ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் ஜாா்ஜியா வோ்ஹாம் 4 பவுண்டரிகளுடன் 30, போப் லிட்ச்ஃபீல்டு 5 பவுண்டரிகளுடன் 26, எலிஸ் பெரி 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாகும்.
ஜாா்ஜியா வோல் 18, நிகோலா கேரி 12, பெத் மூனி 5, ஆஷ்லே காா்ட்னா் 4, அனபெல் சதா்லேண்ட் 3, கிம் காா்த் 2, டாா்சி பிரௌன் 1 ரன்னுக்கு என, ஆஸ்திரேலிய பேட்டா்கள் அடுத்தடுத்து வெளியேறினா்.
கேப்டன் சோஃபி மாலினியுக்ஸ் 6 ரன்களுடன் கடைசி வீராங்கனையாக நிற்க, இந்திய பௌலா்களில் அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். ரேணுகா சிங், ஸ்ரீசரணி ஆகியோா் தலா 2, கிராந்தி கௌட், தீப்தி சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் இந்திய இன்னிங்ஸில் ஷஃபாலி வா்மா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 21 ரன்களுக்கு விடைபெற, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது ஸ்மிருதி மந்தனா 16, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனா். ஆஸ்திரேலிய தரப்பில் சோஃபி 1 விக்கெட் வீழ்த்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.