கடைசி ஆஷஸ் டெஸ்ட்டுக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாட் கம்மின்ஸ் இல்லாத நிலையில், ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் வரும் ஜன.4ஆம் தேதி நடைபெற இருக்கும் கடைசி ஆஷஸ் டெஸ்ட்டுக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
மெல்போர்ன் டெஸ்ட்டில் ஆஸி. அணி தோல்வியடைந்தது. இருப்பினும் ஆஸி. 3-1 என தொடரை வென்றுள்ளது.
ஆஸி. அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டக்கெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லீஷ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், டாட் மர்ஃபி, மைக்கேல் நசீர், ஜாய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், ஜாக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.
கேமரூன் கிரீனுக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் பியூ வெப்ஸ்டர் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.