எஸ்ஏ 20 கிரிக்கெட்டில் முதல்முறையாக சூப்பர் ஓவர் வரைக்கும் சென்ற ஆட்டம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
நேற்றிரவு ஜேஎஸ்கே (ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்) அணியும் டிஎஸ்ஜி (டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்) அணியும் மோதின.
டாஸ் வென்ற டிஎஸ்ஜி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் விளையாடிய ஜேஎஸ்கே அணி 20 ஓவர்களில் 205/4 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக சுபம் ரஞ்சனே 50, டு பிளெஸ்ஸி 47 ரன்கள் குவிக்க, கடைசியில் வந்த டோனவன் ஃபெரேரா 10 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டத்தை மாற்றினார்.
அடுததாக பேட்டிங் விளையாடிய டிஎஸ்ஜி அணி 20 ஓவர்களில் 205/8 ரன்கள் எடுத்தது. கடைசி பந்தில் 1 ரன் தேவையான நிலையில் ரன் அவுட் ஆனது.
சூப்பர் ஒவரில் டிஎஸ்ஜி அணி 5/1 ரன்கள் எடுக்க, ஜேஎஸ்கே அணி 3 பந்துகளில் 8/0 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், ஜேஎஸ்கே அணிபுள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.