19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பைத் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடத்தப்படவுள்ளன.
இந்த நிலையில், இந்த தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
15 பேர் கொண்ட அணியை அஸிஸுல் ஹகிம் கேப்டனாக வழிநடத்துகிறார். ஸவாத் அப்ரார் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடருக்கான வங்கதேச அணி விவரம்
அஸிஸுல் ஹகிம் (கேப்டன்), ஸவாத் அப்ரார், சமியுன் பஷீர், ஷேக் பாவேஷ், ரிஷான் ஹொசைன், ஷகாரியா அல் அமீன், முகமது அப்துல்லா, ஷாதின் இஸ்லாம், ஃபரீத் ஹாசன், கலம் சித்திக்கி, ரிஃபாத் பெக், ஸாத் இஸ்லாம், அல் ஃபாஹத், ஷாஹ்ரியார் அகமது, இக்பால் ஹொசைன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.