படம் | ஐசிசி
கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டம்புல்லாவில் நேற்று (ஜனவரி 7) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜனித் லியநாகே 40 ரன்களும், சரித் அசலங்கா மற்றும் வனிந்து ஹசரங்கா தலா 18 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்ஸா மற்றும் அப்ரார் அகமது தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது வாசிம் மற்றும் ஷதாப் கான் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 16.4 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஃபர்கான் 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, சைம் ஆயூப் 24 ரன்களும், ஷதாப் கான் 18 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்‌ஷனா, துஷ்மந்தா சமீரா, வனிந்து ஹசரங்கா மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

In the first T20 match against Sri Lanka, the Pakistan team won by 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கத்தியை காட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: 4 போ் கைது

தேசிய சாலை பாதுகாப்பு வார உறுதிமொழி ஏற்பு! துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பங்கேற்பு!

3 கிலோ கஞ்சா பறிமுதல்: 8 போ் கைது

விபத்துக்குள்ளான காரில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மணவெளியில் செம்மண் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT