இந்திய வீரர் திலக் வர்மாவிற்கு தொடை இடுக்கில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்தக் காரணத்தினால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து திலக் வர்மா விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய டி20 அணியின் முக்கியமான வீரர்
ஹைதராபாதைச் சேர்ந்த திலக் வர்மா (23 வயது) இந்திய டி20 அணியில் மிக முக்கியமான வீரராக இருக்கிறார்.
சமீப காலமாக சூர்யகுமார் யாதவ் சரியாக விளையாடாத நிலையில், அணியை இக்கட்டான சூழ்நிலைகளில் பலமுறை திலக் வர்மா காப்பாற்றியுள்ளார்.
இந்திய அணி அடுத்து நியூசிலாந்துடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இந்தப் போட்டிகள் வரும் ஜன.21ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகின்றன.
அடுத்ததாக உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
அறுவைச் சிகிச்சையும் சந்தேகமும்
இந்நிலையில்தான், திலக் வர்மாவிற்கு அறுவைச் சிகிச்சை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடும்போது தொடை இடுக்கில் கடுமையான வலியினால் அவதிப்பட்டார்.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நிபுணர்களிம் ஆலோசனையின்படி திலக் வர்மாவுக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
அவர் எப்போது நலமுடன் திரும்புவார் என்பதை விரைவில் தெரிவிப்போம் என்றார்.
நியூசிலாந்து தொடரில் விளையாடமாட்டார் என்ற நிலையில், உலகக் கோப்பையின் முதல் கட்ட போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனவும் தகவல் மூலம் தெரியவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.