மகளீர் பிரீமியர் லீக்கில் ஹர்லீன் தியோல் வாழ்க்கை ஒரே நாளில் மாறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
மகளீர் பிரீமியர் லீக்கில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் உபி வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 161/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நாட் ஸ்கைவர்-பிரண்ட் 43 பந்தில் 65 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய உபி வாரியர்ஸ் அணி 18.1 ஓவர்களில் 162/3 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் ஹர்லீன் தியோல் 39 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகி விருது (ஜன.15) வென்றார்.
இதற்கு முந்தைய போட்டியில் (ஜன.14) , குறைவான ஸ்டிரைக் ரேட் உடன் விளையாடியதால் பாதியிலேயே களத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இரண்டே நாளில் தன்னுடைய அவமானத்தை வெகுமதியாக மாற்றிய ஹர்லீன் தியோலுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்த சீசனில் யுபி வாரியர்ஸ் அணிக்கு இது முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்லீன் தியோல் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது அவரது அழகுக்கான காரணம் என்னவென்று கேட்டு அவரை வெட்கப்பட வைத்த சம்பவம் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.