முகப்பு
கிரிக்கெட்

23 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற மே.இ.தீவுகள்!

23 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பற்றி...

Updated On : 8 ஜூலை 2026, 3:47 pm IST
தொடரை வென்ற மகிழ்ச்சியில் மே.இ.தீவுகள்.
பகிர்:

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி 23 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி சாதனை படைத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

இந்தத் தொடரில் ஒருநாள் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்ற நிலையில், டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 217 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றிருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதிய இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆண்டிகுவா சர் விவியன் ரிச்சர்ட் கிரிக்கெட் திடலில் நடைபெற்றது.

இந்தத் தொடரின் முதல் இன்னிங்ஸில் முறையே இலங்கை அணி 543 ரன்களும், மேற்கிந்தியத் தீவுகள் அணி 499 ரன்களும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 251/9 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

பின்னர், 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி, 109 ரன்கள் எடுத்திருந்தபோது போட்டி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் மேற்கிந்தியத்தீவுகள் அணி தொடரை வென்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஜஸ்டின் க்ரீவ்ஸ், ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் தனதாக்கினார்.

மேற்கிந்திய தீவுகள் அணி 2003 பிப்ரவரிக்குப் பிறகு தனது முதல் டெஸ்ட் தொடர் வெற்றியையும் பதிவு செய்துள்ளது.

summary

West Indies secured their first Test series victory since February 2023 after the second Test against Sri Lanka ended in a high-scoring draw, sealing a 1-0 series triumph at the Sir Vivian Richards Stadium in North Sound on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments