முகப்பு
கிரிக்கெட்

விராட் கோலியின் சாதனையை முறியடித்த சாஹிப்சாதா ஃபர்ஹான்!

விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர் குறித்து...

Updated On : 1 மார்ச், 2026 at 1:32 PM
சதமடித்த மகிழ்ச்சியில் சாஹிப்சாதா ஃபர்ஹான். - படம்: ஏபி
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 1:13 PM

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் முறியடித்துள்ளார்.

ஓர் உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் அதிக ரன்கள் குவித்தவராக பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் சாதனையை மாற்றி எழுதியுள்ளார்.

Updated On : 1 மார்ச், 2026 at 1:17 PM

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 212 ரன்கள் குவித்தது. 

Advertisement

அடுத்து விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 207 ரன்கள் குவித்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இலங்கையை 147 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறலாம் என்ற வாய்ப்பை இழந்தது.

Updated On : 1 மார்ச், 2026 at 1:20 PM

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 60 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்த உலகக் கோப்பையில் இது அவரது இரண்டாவது சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்துடன் இந்த உலகக் கோப்பையில் சாஹிப்சாதா ஃபர்ஹான் 383 ரன்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் விராட் கோலியின் அதிகபட்ச ரன் எடுத்தவர் என்ற சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 மார்ச், 2026 at 1:23 PM

ஓர் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்

1. சாஹிப்சாதா ஃபர்ஹான் - 383 ரன்கள் (2026)

2. விராட் கோலி - 319 ரன்கள் (2014)

3. திலகரத்னே தில்ஷன் - 317 ரன்கள் (2009)

4. பாபர் அசாம் - 303 ரன்கள் (2021)

5. மஹீலா ஜெயவர்தனே - 302 ரன்கள் (2010)

summary

Pakistani player Sahibzada Farhan has broken Virat Kohli's record of scoring the most runs in the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.