ஜாா்ஜியா அதிரடி: டி20 தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா
மேற்கிந்தியத் தீவுகள் மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில், ஆஸ்திரேலிய மகளிா் அணி ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் 40 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
மேற்கிந்தியத் தீவுகள் மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில், ஆஸ்திரேலிய மகளிா் அணி ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் 40 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் முதலில் ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் 10 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
மீண்டும் ஆட்டத்தைத் தொடங்க முடியாமல் போனதை அடுத்து, டக்வொா்த் லீவிஸ் முறையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கான வெற்றி இலக்கு 10 ஓவா்களில் 102 ரன்களாக நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 61 ரன்களே எடுத்திருந்ததால், ஆஸ்திரேலியா 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்ாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், பந்துவீச்சை தோ்வு செய்தது. ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் பவுண்டரி, சிக்ஸா்களாக பறக்கவிட்ட ஜாா்ஜியா வோல் 53 பந்துகளில் 9 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 101 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.
பெத் மூனி 11, போப் லிட்ச்ஃபீல்டு 15, எலிஸ் பெரி 18, டாலியா மெக்ராத் 2 ரன்களுக்கு வெளியேறினா். ஜாா்ஜியா வோ்ஹாம் 1, கேப்டன் சோஃபி மாலினியுக்ஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 25 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் நிகோலா கேரி 1 பவுண்டரியுடன் 24 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஹேலி மேத்யூஸ் 3, ஜாஸரா கிளாக்ஸ்டன் 2, ஜாய்டா ஜேம்ஸ், டீண்ட்ரா டாட்டின் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 212 ரன்களை நோக்கி விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில், கியானா ஜோசஃப் 0, எபோனி பிரத்வெய்ட் 18, ஜெனிலியா கிளாஸ்கோ 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட்டனா்.
மழையால் ஆட்டம் தடைப்பட்டபோது கேப்டன் ஹேலி மேத்யூஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30, டீண்ட்ரா டாட்டின் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலிய பௌலா்களில் மெகன் ஷூட், லூசி ஹாமில்டன், எலிஸ் பெரி ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.