முகப்பு
கிரிக்கெட்

பஞ்சாப் கிங்ஸுக்கு 236 ரன்கள் இலக்கு! க்ளாசன், இஷான் அரைசதம் விளாசல்!

க்ளாசன், இஷான் கிஷன் அதிரடியால் பஞ்சாப் கிங்ஸுக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

இஷான் கிஷன் - க்ளாசன்.
பகிர்:

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 235 ரன்கள் குவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடர் இந்தியா முழுவதுமுள்ள 14 நகர்களில் நடைபெற்று வருகிறது.

இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் திடலில் நடைபெறும் 49-வது போட்டியில் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா 2 பௌண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 35 ரன்களும், டிராவிஸ் ஹெட் 3 பௌண்டர்கள், 3 சிக்ஸர்கள் உள்பட 38 ரன்களும் எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

நிதானமாக விளையாடிய விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 2 பௌண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 55 ரன்களும், ஹெய்ண்ட்ரிச் க்ளாசன் 3 பௌண்டரிகள், 4 சிக்ஸர்கள் 69 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

நிதிஷ்குமார் ரெட்டி 13 பந்துகளில் 2 பௌண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 29 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் அணித் தரப்பில் அர்ஷ்தீப் சிங், லோக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல், விஜய்குமார் வைசாக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

summary

The Hyderabad team has amassed 235 runs in the match against the Punjab Kings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments