ஐபிஎல் தொடரில் 2000 ரன்களைக் கடந்த அக்ஷர் படேல்!
ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஷர் படேல் 2000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஷர் படேல் 2000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நேற்று (மே 11) நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் தரப்பில் சிறப்பாக விளையாடிய கேப்டன் அக்ஷர் படேல் அதிகபட்சமாக 30 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
Advertisement
Advertisement
நேற்றையப் போட்டியில் 56 ரன்கள் எடுத்தன் மூலம், ஐபிஎல் தொடரில் 2000 ரன்களைக் கடந்து அக்ஷர் படேல் சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 174 போட்டிகளில் விளையாடியுள்ள அக்ஷர் படேல் 2016 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 4 அரைசதங்கள் அடங்கும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேபிடல்ஸ் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Delhi Capitals captain Axar Patel has set a record in the IPL series by crossing the 2,000-run mark.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.