ஐபிஎல் தொடரில் 1000 ரன்களைக் கடந்த கேமரூன் கிரீன்!
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் கேமரூன் கிரீன் 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் கேமரூன் கிரீன் 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட் செய்தது.
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது
அந்த அணியில் அதிகபட்சமாக ஃபின் ஆலன் 93 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அங்க்ரிஷ் ரகுவன்ஷி 82* ரன்களும், கேமரூன் கிரீன் 52* ரன்களும் எடுத்தனர்.
இன்றையப் போட்டியில் 52 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐபிஎல் தொடரில் 1000 ரன்களைக் கடந்து கேமரூன் கிரீன் சாதனை படைத்துள்ளார். இதுவரை 41 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 1023 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 4 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும்.
Kolkata Knight Riders player Cameron Green has set a record by crossing the 1,000-run mark in the IPL series.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.