முகப்பு

ஐபிஎல் மினி ஏலத்தில் தோனியின் தலையீடு இருக்காது: இர்பான் பதான்

ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மகேந்திர சிங் தோனி பங்கேற்க மாட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மினி ஏலத்தில் தோனியின் தலையீடு இருக்காது: இர்பான் பதான்
எம்.எஸ். தோனி - படம்: எக்ஸ் / சிஎஸ்கே
பகிர்:

ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மகேந்திர சிங் தோனி பங்கேற்க மாட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கோவாவில் வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்தில் அண்மையில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம்பெறமாட்டார் என இர்பான் பதான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தோனி பற்றி நன்றாக தெரிந்ததால் அவர் ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை அணி நிர்வாகத்துடன் பங்கேற்று வீரர்களை ஏலத்தில் எடுப்பார் என நான் நினைக்கவில்லை. அவர் சென்னை சூப்பர் கிங்ஸின் ஆலோசகர், ஏலத்தில் பங்கேற்று வீரர்களை ஏலமெடுப்பது அவரது வேலையில்லை. வீரர்களுக்கு தனது அனுபவங்களை வழங்கி அவர்களை சிறப்பாக செயல்பட வைத்து அணிக்காக போட்டிகளை வென்று கொடுக்க வைப்பதே அவரது வேலை. ஏலத்தில் பங்கேற்பதும், வீரர்கள் தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதும் அணி நிர்வாகத்தின் வேலை.

Advertisement

Advertisement

இர்பான் பதான்

தோனி அனைத்து விஷயங்களையும் எளிதாக எடுத்தக் கொள்ளக் கூடியவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தொலைநோக்குப் பார்வையுடன் அணிக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுக்கும். அணி நிர்வாகத்தை தோனி எப்போதும் முழுமையாக நம்புகிறார். அதனால், தோனி ஏலத்தில் பங்கேற்றால் நான் ஆச்சரியமடைவேன். அவர் அணியின் ஆலோசகராக அணியை வலுப்படுத்தும் வேலைகளில் கவனம் செலுத்துவார், ஐபிஎல் மினி ஏலத்தில் அல்ல என்றார்.

19 ஐபிஎல் சீசன்களில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 17 சீசன்களில் விளையாடியுள்ளார். கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு தடை விதிக்கப்பட்டபோது, தோனி ரைசிங் புணே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

summary

Former Indian player Irfan Pathan has stated that Mahendra Singh Dhoni will not participate in the IPL mini-auction alongside the Chennai Super Kings team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.