FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஓய்வுபெற்றார் தோனி! சென்னை சூப்பர் கிங்ஸ் ஆலோசகராக நியமனம்!

ஐபிஎஸ் கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வுபெற்றார்.

34 வினாடிகள் முன்பு
எம்.எஸ். தோனி - படம்: எக்ஸ் / சிஎஸ்கே.
பகிர்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

Advertisement

Advertisement

சென்னை அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் தோனி பெற்றுக் கொடுத்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி வந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து 2023 ஆம் ஆண்டு வெளியேறிய தோனி, இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பொறுப்பை ஒப்படைத்தார்.

கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றாலும், காயம் காரணமாக ஒரு போட்டியில்கூட தோனி விளையாடவில்லை.

அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட இன்றே கடைசி நாளாகும்.

இந்த நிலையில், தோனியை மீண்டும் சிஎஸ்கே அணி தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவிய நிலையில், அவர் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Dhoni retires! Appointed as advisor for Chennai Super Kings!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.