FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக மோஹித் சர்மா, ஆல்பி மோர்கல் நியமனம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக மோஹித் சர்மா, ஆல்பி மோர்கல் நியமியக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

மோஹித் சர்மா, ஆல்பி மோர்கல்.
பகிர்:

சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக மோஹித் சர்மா, ஆல்பி மோர்கல் நியமியக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் வலுவான அணிகளில் முதன்மையான அணியாகக் கருதப்பட்ட 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த 3 தொடர்கள் சரியாக அமையவில்லை. 2024-ல் 5-வது இடத்தையும், 2025-ல் 10-வது இடத்தையும், 2026-ல் 8-வது இடத்தையும் பிடித்து ஏமாற்றமளித்த சென்னை அணியில் தற்போது அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீஃபன் பிளெமிங் அந்தப் பொறுப்பிலிருந்து விலகியதையடுத்து, அண்மையில் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் ஏலம் நெருங்கி வரும் சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது பயிற்சியாளர் குழுவில் நீண்டகால பேட்டிங் பயிற்சியாளராக இருந்த மைக்கேல் ஹஸ்ஸி உள்பட ஐந்து பேரையும் விடுவித்ததாக நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக மோஹித் சர்மாவையும், உதவிப் பயிற்சியாளர்களாக ஆல்பி மோர்கல், காரெத் பேட்டி ஆகியோரை நியமித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

38 வயதாகும் மோஹித் சர்மா இந்திய அணிக்காக 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 48 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், கடந்த ஆண்டு டிசம்பரில் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

அதேபோன்று, ஆல்பி மோர்கல்  2008 முதல் 2013 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளார். அதில், 2010, 2011 ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்ற சென்னை அணியில் இடம்பெற்றிருந்தார். இங்கிலாந்து அணிக்காக 9 டெஸ்ட், 10 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டியில் விளையாடியுள்ள காரெத் பேட்டியும் சென்னை அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இணைந்துள்ளார்.

summary

Chennai Super Kings head coach Zaheer Khan confirmed Mohit Sharma's appointment as bowling coach for IPL 2027 and hinted at a possible return for Albie Morkel as the franchise revamps its support staff ahead of the retention deadline. CSK confirmed Morkel's appointment as assistant coach.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments