FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்கள் இருவர் விலகல்..! காரணம் என்ன?

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் விலகல் குறித்து...

8 அக்டோபர் 2026, 2:57 pm IST
பஞ்சாப் கிங்ஸ் இலச்சினை - படம்: எக்ஸ் / பஞ்சாப் கிங்ஸ்
பகிர்:

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பஞ்சாப் அணி விரைவில் அறிவிப்பு வெளியிடுமெனக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்நாட்டு அணிகளுக்கான பயிற்சியாளர் பதவிக்கு இருவருமே செல்லவிருப்பதால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கம் முதல் விளையாடி வருகிறது. இதுவரை கோப்பை வெல்லாத அணியாக இருக்கும் இதனை தற்போது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

Advertisement

Advertisement

தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்படுகிறார். ஃபீல்டிங் பயிற்சியாளரான பிராட் ஹாடின், பந்துவீச்சு பயிற்சியாளரான ஜேம்ஸ் ஹோப்ஸ் தற்போது விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேம்ஸ் ஹோப்ஸ் குயின்ஸ்லேண்ட் மற்றும் பிரிஸ்பேன் அணிக்கும் பிராட் ஹாடின் நியூ சௌத் வேல்ஸ்அணிக்கும் தலைமைப் பயிற்சியாளராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

முன்னதாக ரிக்கி பாண்டிங் உடன் தில்லி கேபிடல்ஸில் ஜேம்ஸ் ஹோப்ஸ் பணியாற்றினார். ஹாடினும் பாண்டிங் உடன் பணியாற்றி இருந்தார். அதனால்தான் இருவரையும் அவர் பஞ்சாப் கிங்ஸில் உடன் அழைத்து வந்திருந்தார்.

ஐபிஎல் 2025ல் இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற பஞ்சாப் 2026ல் முதல் பாதியில் 6 போட்டிகளில் வென்று, பின்னர் தொடர் தோல்விகளால் பிளே ஆஃப் செல்லாமல் வெளியேறியது. சுழல் பந்து பயிற்சியாளரும் விலகிய நிலையில், இந்த அணிக்கு தற்போது 3 காலிப் பணியிடங்கள் உருவாகியுள்ளன.

Hopes, Haddin leave Punjab Kings coaching staff; Franchise yet to confirm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments