FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மைக் ஹஸ்ஸி, சிம்மன்ஸ் அதிரடி நீக்கம்... சிஎஸ்கேவில் ஒரே நாளில் 5 பயிற்சியாளர்கள் விடுவிப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரே நாளில் அதிரடியாக 5 பயிற்சியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

பகிர்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரே நாளில் அதிரடியாக 5 பயிற்சியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வலுவான அணிகளில் முதன்மையான அணியாகக் கருதப்பட்ட ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த மூன்று தொடர்கள் சரியாக அமையவில்லை.

2024-ல் 5-வது இடத்தையும், 2025-ல் பத்தாவது இடத்தையும், 2026-ல் 8-வது இடத்தையும் பிடித்து ஏமாற்றமளித்த சென்னை அணியில் தற்போது அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் ஏலம் நெருங்கி வரும் சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது பயிற்சியாளர் குழுவில் நீண்டகால பேட்டிங் பயிற்சியாளராக இருந்த மைக்கேல் ஹஸ்ஸி உள்பட ஐந்து பேரையும் விடுவித்துவிட்டதாக அறிவித்துள்ளது.

2008-ல் சிஎஸ்கே அணியில் வீரராக இணைந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த மைக் ஹஸ்ஸி, ஆறு சீசன்கள் சென்னை அணிக்காக விளையாடினார். தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு, 2018-ஆம் ஆண்டில் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்குடன் இணைந்து பேட்டிங் பயிற்சியாளராக அந்த அணிக்குத் திரும்பினார்.

அவரது பயிற்சியாளர் பதவிக்காலத்தில் சென்னை அணி 2018, 2021 மற்றும் 2023-ல் சாம்பியன் பட்டங்களை வென்றது. இதில் மை ஹஸ்ஸி முக்கிய பங்காற்றியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments