FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் 44.52 டன் வீட்டு பழைய பொருள்கள் சேகரிப்பு!

சென்னை மாநகராட்சியில் அக்.3 ஒரே நாளில் வீடுகளில் இருந்து 44.52 டன் பழை பொருள்கள் பெறப்பட்டு அழிக்கப்பட்டது.

5 October 2026, 2:30 am IST
சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சியில் சனிக்கிழமை (அக்.3) ஒரே நாளில் வீடுகளில் இருந்து 44.52 டன் பழை பொருள்கள் பெறப்பட்டு அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியில் சனிக்கிழமைதோறும் வீடுகளில் இருந்து மக்கள் தரும் தகவல் அடிப்படையில் பயன்பாடற்ற பழைய வீட்டு உபயோகப் பொருள்களான சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்டவை பெறப்படுகின்றன.

அதன் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை (அக்.3) மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 178 பேரிடமிருந்து பயன்பாடற்ற பழைய வீட்டு உபயோகப் பொருள்களைப் பெற்றனா்.

Advertisement

Advertisement

பொதுமக்கள் தகவல்படி 26 வாகனங்களில் சென்று 44.52 டன் எடை கொண்ட பொருள்கள் சேகரிக்கப்பட்டன. அவை கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அறிவியல்பூா்வ முறையில் எரியூட்டி அழிக்கப்பட்டன.

கடந்த 2025 அக்டோபா் முதல் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின்படி மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்திய மெத்தை உள்ளிட்டவற்றை பயன்பாடற்ற நிலையில் வீதிகளிலோ, நீா் நிலைகளிலோ வீசாமல் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 1913 என்ற எண்ணில் தெரிவித்து வருகின்றனா். அதன்படி சனிக்கிழமை தோறும் மாநகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் அவற்றை சேகரித்து வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments