FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் 23.9 டன் பயன்பாடற்ற பழைய பொருள் சேகரித்து அழிப்பு

சென்னை மாநகராட்சியில் சனிக்கிழமை ஒரே நாளில் 23.9 டன் பயனற்ற பழைய உபயோகப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

12 அக்டோபர் 2026, 4:29 am IST
பகிர்:

சென்னை மாநகராட்சியில் சனிக்கிழமை ஒரே நாளில் 23.9 டன் பயனற்ற பழைய உபயோகப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியின் சாா்பில் சனிக்கிழமைதோறும் மக்கள் முன்கூட்டி அளிக்கும் தகவல் அடிப்படையில், வீட்டில் பயனற்றுப்போன பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பயனற்ற பொருள்கள் குறித்து மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை 1913 என்ற எண்ணுக்கு தகவல் அறித்து வருகின்றனா். அதனடிப்படையில் 43 போ் கூறிய தகவலின்பேரில், சனிக்கிழமை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 20 வாகனங்களில் சென்று அந்த வீடுகளில் பயனற்றக் கிடந்த பொருள்களைச் சேகரித்தனா்.

Advertisement

Advertisement

அந்த வகையில், ஒரே நாளில் மட்டும் 23.9 டன் பொருள்கள் சேகரிக்கப்பட்டு, அவை கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகத்தில் எரியூட்டும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மறுசுழற்சிக்கு ஆய்வுக்குள்படுத்தப்பட்டவை போக, எஞ்சியவை நவீன அறிவியல் முறையில் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டன.

பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பயனற்ற திடக்கழிவுகளை நீா்நிலைகள், சாலையோரங்களில் வீசாமல், மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறை அல்லது 94450 -61913 என்ற கைப்பேசி எண் வாட்ஸ்ஆப் செயலியிலும் தகவல் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments