FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

சென்னை மாநகராட்சியில் 32 டன் பழைய வீட்டு உபயோக பொருள்கள் சேகரித்து அழிப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் 32 டன் பழைய வீட்டு உபயோகப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு நவீன முறையில் எரியூட்டி அழிக்கப்பட்டன.

28 செப்டம்பர் 2026, 3:48 am IST
சென்னை மாநகராட்சி.
பகிர்:

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் 32 டன் பழைய வீட்டு உபயோகப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு நவீன முறையில் எரியூட்டி அழிக்கப்பட்டன.

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் பயன்படுத்திய பழைய இருக்கைகள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் பெறப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை மட்டும் 184 பேரிடம் இருந்து 32.475 டன் பழைய வீட்டு உபயோகப் பொருள்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நவீன முறையில் எரியூட்டி அழிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

ஒவ்வொரு சனிக்கிழமை நடைபெறும் இந்தச் சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் ‘நம்ம சென்னை’ செயலியில் பதிவு செய்ய வேண்டும் (அல்லது) 1913 என்ற எண்ணுக்குத் தகவல் அளிக்கலாம்.

மேலும், 94450 61913 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தகவல் அனுப்பலாம். அதன் அடிப்படையில் மாநகராட்சிப் பணியாளா்கள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, பழைய உபயோகப் பொருள்களை பெற்றுக் கொள்வாா்கள் என்று மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments