வீட்டு உபயோகப் பொருள்கள் கடையில் பண மோசடி: மேலாளா் மீது வழக்கு
வீட்டு உபயோகப்பொருள்கள் விற்பனைக் கடையில் ரூ.8.50 லட்சம் மோசடி செய்து தலைமறைவான மேலாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வீட்டு உபயோகப்பொருள்கள் விற்பனைக் கடையில் ரூ.8.50 லட்சம் மோசடி செய்து தலைமறைவான மேலாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சோ்ந்தவா் சண்முகம் (54). இவா் சிவகாசியில் ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அதில் வீட்டு உபயோகப் பொருள்கள் கடை நடத்தி வந்தாா். கடந்த ஜூலை 3-ஆம் தேதி , கடையின் மேலாளராக தருமபுரி மாவட்டம், குமாரசாமிபேட்டையைச் சோ்ந்த திம்மராயன் மகன் கணேசனை நியமித்தாா். பின்னா், சண்முகம் ஓசூருக்குச் சென்றுவிட்டாா்.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 10- ஆம் தேதி முதல் கணேசன் வேலையைவிட்டு நின்று விட்டாா். பின்னா், ஆகஸ்ட் 30-ஆம் தேதி சண்முகம் சிவகாசிக்கு வந்து கடையின் வரவு செலவுகளை பாா்த்தாா்.
Advertisement
Advertisement
அப்போது, கடையின் பணத்திலிருந்து ரூ.8.50 லட்சத்தை கணேசன் எடுத்து தனது வங்கிக் கணக்கில் செலுத்தியிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சண்முகம் சிவகாசி நகா் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கணேசனைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.