தீபாவளிக்கு முன்னதாகவே விலை உயரும் டிவி, ஏசி, வீட்டு உபயோகப் பொருள்கள்!
வீட்டு உபயோகப் பொருள்களின் விலை உயர்வு பற்றி...
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே டிவி, ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் விலை 8 சதவிகிதம் வரை உயரவுள்ளது.
மேற்காசியப் போர் தீவிரமடைந்து இருக்கும் சூழலில், காப்பர், அலுமினியம், எஃகு, விமான சரக்கு கட்டணங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்டவையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனிடையே, நாணய மாற்றும் விகிதத்தில் நிலவும் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றின் தாக்கத்தை ஈடுசெய்யும் வகையில், அக். 1 முதல் வீட்டு உபயோகப் பொருள்களின் விலையை உயர்த்த முன்னணி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
ஏசி விலை 5 முதல் 8 சதவிகிதம் வரை உயரவுள்ளது. சில நிறுவனங்கள் வாசிங் மிஷன், ஃபிரிட்ஜ் மற்றும் எல்.இ.டி. டிவிகளின் விலைகளையும் 3 - 4 சதவிகிதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளன.
Advertisement
Advertisement
ப்ளூ ஸ்டார், கோத்ரேஜ் அப்ளையன்ஸ், ஹையர், டைகின் மற்றும் சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே அனைத்துப் பிரிவுகளிலும் 4 - 10 சதவீதம் வரையிலான விலை உயர்வை அறிவித்துள்ளன.
எல்ஜி மற்றும் ஹிட்டாச்சி ஆகிய நிறுவனங்களும் ஏசி விலைகளை சுமார் 5 சதவிகிதம் உயர்த்தியுள்ளன.
இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக வீட்டு உபயோகப் பொருள்களின் விலையை முன்னணி நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
ஆயுதப் பூஜை, தசரா, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வரும் நிலையில், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கத் திட்டமிட்டிருந்த மக்களுக்கு விலை உயர்வு ஏமாற்றம் அளித்துள்ளது.
இருப்பினும், பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முன்கூட்டியே பழைய விலையில் வாங்கப்பட்ட சரக்குகளை டீலர்களும் விநியோகஸ்தர்களும் ஏற்கெனவே இருப்பு வைத்திருப்பதால், இதன் தாக்கம் குறைவாக இருக்கும் என்று விற்பனையாளர்கள் நம்புகின்றன.
Prices of TVs, ACs, and home appliances to rise ahead of Diwali!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.