FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அக்டோபர் 1 முதல் ஏசி, டிவி விலை 8% வரை அதிகரிக்க வாய்ப்பு!!

அக்டோபர் முதல் ஏசி, டிவி, வாஷிங்மெஷின் உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களின் விலையும் 8 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளது.

27 செப்டம்பர் 2026, 9:41 pm IST
கடை | கோப்புப்படம் - file photo
பகிர்:

புதுதில்லி: அக்டோபர் முதல் ஏசி, டிவி, வாஷிங்மெஷின் உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களின் விலையும் 8 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளது. பண்டிகை காலம் தொடங்கும் நிலையில் இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனங்களான ஏசி, எல்இடி டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களின் விலையை அக்டோபர் 1 முதல் 5 முதல் 8 சதவீதம் வரை உயர உள்ளது.

மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடியால் ஏற்பட்ட ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றின் தாக்கத்தை ஈடுகட்ட இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement

Advertisement

2026 ஆம் ஆண்டு, இந்த துறையில் மேற்கொள்ளப்படும் 3வது விலை உயர்வு இதுவாகும். தாமிரம், அலுமினியம், எஃகு மற்றும் கச்சா எண்ணெய் சார்ந்த பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும், அதே வேளையில் சரக்குக் கட்டணங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் விலை உயர்வைத் தவிர்க்க முடியாததாக்கியுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதில் ஏசி விலையானது 5-8 சதவீதம் வரை உயரவுள்ளது. வாஷிங் மெஷின், பிரிட்ஜ் மற்றும் எல்இடி டிவிகளின் விலையை 3-4 சதவீதம் வரை உயர உள்ளது.

இந்த விலை உயர்வு பண்டிகைக் காலத் தேவையைப் பாதிக்கலாம் என்று சில நிறுவனங்கள் அஞ்சினாலும், டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முன்கூட்டியே கொள்முதல் செய்து உள்ளதால், இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று கருதுகின்றனர்.

ப்ளூ ஸ்டார், கோத்ரெஜ் அப்ளையன்ஸ், ஹையர், டைகின் மற்றும் சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் பல்வேறு பிரிவுகளில் 4 முதல் 10 சதவீதம் வரையிலான விலை உயர்வை ஏற்கனவே அறிவித்துள்ளன. அதே சமயம், பானாசோனிக் நிறுவனம் விலை உயர்வு குறித்து முடிவெடுப்பதற்கு முன் சூழ்நிலையை மதிப்பீடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

எல்ஜி மற்றும் ஹிட்டாச்சி பிராண்ட் ஏசி விலையை சுமார் 5 சதவீதம் உயர்த்தியுள்ளன.

மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக ஏசி மற்றும் டீப் ஃப்ரீசர்களின் விலை 5-8 சதவீதம் உயர்ந்துள்ளதாக ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி. தியாகராஜன் தெரிவித்தார்.

தாமிரம், எஃகு மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், இந்த ஆண்டில் நிறுவனம் மேற்கொள்ளும் 3 வது விலை உயர்வு இது என்றும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு பண்டிகைக் கால விலைகளுடன் ஒப்பிடுகையில், செலவுகள் சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக தியாகராஜன் தெரிவித்தார்.

கடைசியான விலை மாற்றத்திற்குப் பிறகு மூலப்பொருட்களின் விலை 8-10 சதவீதம் உயர்ந்திருப்பதால், தொழில் துறை முழுவதும் மீண்டும் ஒருமுறை விலையை உயர்த்துவது, 'தவிர்க்க முடியாததாகிவிட்டது' என்று கோத்ரெஜ் என்டர்பிரைசஸ் குழுமத்தின் வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவின் வணிகத் தலைவரும் நிர்வாகத் துணைத் தலைவருமான கமல் நந்தி தெரிவித்த நிலையில், பல்வேறு தயாரிப்புப் பிரிவுகளிலும் 5 முதல் 7 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும் என்றார்.

தீபாவளி வரையிலான விற்பனை பெரும்பாலும் பழைய விலையில் நடைபெறும். தீபாவளிக்குப் பிறகு புதிய விலைகள் நிச்சயமாக அமலுக்கு வரும் என்றார்.

ஹையர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் என்.எஸ். சதீஷ் கூறுகையில், விலையை உயர்த்தாவிட்டால் நாங்கள் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். விலையை உயர்த்தினால் விற்பனை பாதிக்கப்படலாம், ஆனால் வேறு வழியில்லை.

அக்டோபர் 1 முதல் ஏசி-யின் விலை சுமார் 5 சதவீதம் உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், மூலப்பொருள் செலவுகள் தொடர்ந்து அதிகரித்தால் தீபாவளிக்குப் பிறகும் ஜனவரியிலும் விலை உயர்வு இருக்கலாம் என்றும், எல்இடி டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பிரிவுகளிலும் 2-3 சதவீத விலை உயர்வு இருக்கும் என்பதை சதீஷ் உறுதிப்படுத்தினார்.

summary

Ahead of the peak festival season, consumer electronics makers are going to increase prices by 5 per cent to 8 per cent effective from October 1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments