வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு: வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை?
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 66.50 உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பாக...
சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 66.50 உயர்த்தப்பட்டுள்ளது.
மாதந்தோறும் 1 ஆம் தேதி வணிகப் பயன்பாடுக்கான சிலிண்டர், விமான எரிப்பொருள் ஆகியவற்றின் விலையை மாற்றியமைப்பது போல அக்டோபர் 1 ஆம் தேதியான வியழக்கிழமை அவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளன.
இதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, சென்னையில் ரூ.66.50 உயர்த்தப்பட்டு ரூ.2,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த விலை உயர்வால் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் இந்த எரிபொருளைச் சார்ந்திருக்கும் பிற வணிகங்களுக்கான செலவு அதிகரித்துள்ளது.
சிலிண்டர் விலை உயர்வால் ஏற்கனவே பல உணவகங்கள், தொழிலகங்கள் மூடப்பட்டன. தேநீர், காபி போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் மீண்டும் விலை உயர்த்தப்பட்டிருப்பது வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் அந்த சிலிண்டர் விலை ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையில் பதட்டமான நிலை நீடித்து வருகிறது. இந்த ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை காரணமாகப் பயன்படுத்திக் கொண்டு சமையல் எரிவாயு விலை இந்தியாவில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
The price of 19-kg commercial LPG cylinders has increased from October 1, with the hike varying across cities.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.