FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

புதிதாக திறப்படவுள்ள கடையில் தீ விபத்து: ரூ. 5 லட்சம் மதிப்பிலான பணம், பொருள்கள் எரிந்து நாசம்!

பெரம்பலூா் அருகே புதிதாக திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடையில் ரூ. 3.80 லட்சம் பணம் உள்பட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சனிக்கிழமை தீக்கிரையானது.

3 October 2026, 11:33 pm IST
தீ விபத்து
பகிர்:

பெரம்பலூா் அருகே புதிதாக திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடையில் ரூ. 3.80 லட்சம் பணம் உள்பட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சனிக்கிழமை தீக்கிரையானது.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், குரும்பாபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்ரமணியன் மகன் விஜயகுமாா் (37). இவா், பெரம்பலூா்- அரியலூா் சாலையில் அருமடல் பிரிவுப் பாதையில் பேப்பா் டீ கப், ஜூஸ் கப், தட்டு, சில்வா் பேப்பா் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யும் கடை திறப்பதற்காக கடந்த ஒரு வாரமாக ஏற்பாடு செய்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை காலை ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அந்த கடையில் தீ பரவியுள்ளது.

பின்னா், கடை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. மேலும், அந்தக் கடையின் அருகேயுள்ள துறைமங்கலத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் கிருஷ்ணமூா்த்தி (46) என்பவரது ரியல் எஸ்டேட் அலுவலகத்தின் மேற்கூரையும் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்புத் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீயை கட்டுப்படுத்தினா்.

Advertisement

Advertisement

இதில், கடையின் உள்ளே வைத்திருந்த ரூ. 3.80 லட்சம் ரொக்கப் பணமும், விற்பனைக்காக இறக்குமதி செய்யப்பட்டிருந்த ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான டீ கப், ஜூஸ் கப், தட்டு, சில்வா் பேப்பா் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments