FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பஞ்சாப்: லாட்டரியில் ரூ. 12 கோடி பரிசு வென்ற லாரி ஓட்டுநர்!

பஞ்சாப் மாநிலத்தின் லாட்டரியில் ரூ. 12 கோடி பரிசை லாரி ஓட்டுநர் வென்றது குறித்து...

22 வினாடிகள் முன்பு
லாட்டரியில் ரூ. 12 கோடி பரிசை வென்ற லாரி ஓட்டுநர் - படம் - ஏஎன்ஐ
பகிர்:

பஞ்சாப் மாநிலத்தின் தீபாவளி லாட்டரியில் ரூ. 12 கோடி பரிசை லாரி ஓட்டுநர் வென்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான பல்ஜிந்தர் சிங், தனுடைய குடும்பத்துக்கே தெரியாமல் சுமார் 15 ஆண்டுகளாக ரகசியமாக லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

இதைத் தொடர்ந்து, தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற பஞ்சாபின் பம்பர் லாட்டரியில் ரூ. 500 கொடுத்து ஒரு லாட்டரி டிக்கெட்டை பல்ஜிந்தர் சிங் வாங்கியுள்ளார்.

இந்த பம்பர் லாட்டரி பரிசுக்கான குலுக்கல் கடந்த நவ. 16 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், முதல் பரிசான ரூ. 12 கோடியை பல்ஜிந்தர் சிங் வென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பல்ஜிந்தர் சிங் பேசுகையில், “நான் நவம்பர் 10-ஆம் தேதி இந்த டிக்கெட்டை வாங்கினேன். நேற்றுதான் எனக்கு விஷயம் தெரியவந்தது. நான் லாரி ஓட்டிப் பிழைக்கிறேன், மேலும், விவசாயமும் செய்கிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தப் பணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர்களின் கல்விக்காக செலவு செய்வேன்” என்று தெரிவித்தார்.

summary

A lorry driver has won a Rs 12 crore prize in the Punjab state Diwali lottery.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.