ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை வேண்டும்! பஞ்சாப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம்...
பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில், தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பஞ்சாப் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் 2 ஆவது நாளான இன்று (அக். 23), வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில், முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி புதிய தீர்மானத்தை, நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா முன்மொழிந்தார்.
இந்தத் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்ற பஞ்சாப் முதல்வர் பகவாந்த் மான், பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும், எஸ்.ஐ.ஆர். பணிகள் மூலம் 14 கோடி வாக்களர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, அந்த தீர்மானத்தில் கூறப்பட்டதாவது:
“தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் செயல்முறை மற்றும் வாக்களர் பட்டியல் தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு ஒரு சுதந்திரமான, பாகுபாடுகள் அற்ற மற்றும் நம்பகமான விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என இந்த அவைக் கோருகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனவும், அவர் மீது குற்றவிசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும், வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி, அகில இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
A resolution has been passed in the Punjab State Assembly demanding a thorough investigation into allegations of irregularities against the Election Commission.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.