FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அதிகரிக்கும் நெருக்கடி? ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்த உத்தரவு!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டது குறித்து...

ஞானேஷ் குமார் - கோப்புப் படம்
பகிர்:

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேரள அரசு உத்தரவிட்டது.

கேரளத்தில் 2006-ல் மாநில போக்குவரத்துத் திட்டத்தில் பணியாற்றிய மலேசியாவை சேர்ந்த பொறியாளர் லீ சீ பீன் தற்கொலை செய்து கொண்டார். மேலும், அவரின் தற்கொலைக் குறிப்பில் அப்போதைய பொதுப்பணித் துறைச் செயலாளர் ஞானேஷ் குமாரின் (தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர்) பெயர் இடம்பெற்றிருந்தது. மலேசிய நிறுவனம் சேர்ந்திருந்த இந்தச் சாலைப் புனரமைப்புத் திட்டத்துக்கு நிதியை விடுவிக்க லஞ்சம் கோரியதாகவும், பணம் செலுத்துவதில் தாமதம் என்ற குற்றச்சாட்டுகளும் தற்கொலைக் குறிப்பில் இருந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், ஞானேஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பின்னர் மத்திய அரசுப் பணியிலும் சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையும் கிடப்பில் போடப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், 2006-ல் கிடப்பில் போடப்பட்ட ஞானேஷ் குமார் மீதான விசாரணையை மீண்டும் தொடங்க கேரள லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 2006-ல் இந்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையின் அனைத்து கோப்புகளையும் சமர்ப்பிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்துவரும் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட மமதா பானர்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பழைய வழக்கின் விசாரணை மீண்டும் முடுக்கிவிடப்பட்டதால் ஞானேஷ் குமாருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

summary

Kerala orders vigilance probe into 2006 suicide case linked to CEC Gyanesh Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments