ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! - காங்கிரஸ் உறுதி!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரையில் எங்களின் போராட்டம் தொடரும் என காங்கிரஸ் கட்சி உறுதி...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரையில் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும் என பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் உறுதியளித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில், சட்டவிரோதமான முறையில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஞானேஷ் குமார் பதவி விலகும் வரையில் தங்களின் போராட்டம் தொடரும் எனவும் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, அவர் கூறுகையில்,
“ஞானேஷ் குமார் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தேர்தல் முறை மற்றும் செயல்பாடுகள் பாரபட்சமின்றி, நேர்மையானதாக மாற்றவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகே நாங்கள் இந்த அறப்போராட்டத்திலிருந்து விலகுவோம். இது பாதியிலேயே கைவிடக்கூடிய போராட்டம் அல்ல” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், அரசின் திட்டங்களைப் பெறுவதற்கு வாக்காளர் அடையாள அட்டையைக் கட்டாயமாக்க மத்திய அரசு பரிந்துரைத்து வருவதால், வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்ட ஏழை மக்கள் தங்களின் உரிமைகளை இழப்பதுடன், அரசின் நலத்திட்டங்களையும் இழக்க நேரிடும் என கே.சி. வேணுகோபால் குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.