FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கொச்சியில் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி போராட்டம்! பிரகாஷ் ராஜ் தலைமையில் பேரணி!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கொச்சியில் சிஜேபி போராட்டம்...

கொச்சியில் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் நடிகர் பிரகாஷ் ராஜ்... - X
பகிர்:

கேரளத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில், சட்டவிரோதமான முறையில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரளத்தின் கொச்சியில் இன்று (நவ. 7) மாலை 3 மணியளவில் மெரைன் டிரைவ் பகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையில் பேரணி நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்தப் பேரணியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெரோம் உள்பட சுமார் 500-க்கும் அதிகமானோர் கையில் தேசியக் கொடிகளுடன் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, மாலை 4 மணியளவில் ராஜேந்திர மைதான் பகுதியில் நடைபெற்ற சிஜேபி தலைமையிலான போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தில், எஸ்ஐஆர் பணிகளை ரத்து செய்து, ஞானேஷ் குமார் மீது குற்றவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக, ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்த முயன்ற சிஜேபி நிர்வாகிகள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர், விடுவிக்கப்பட்ட அவர்கள் இருவரின் மீதும் தில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

summary

In Kerala, the Cockroach Janata Party is staging a protest demanding the resignation of CEC Gyanesh Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.