பெங்களூரில் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி போராட்டம்! பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்பு!
பெங்களூரில் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி போராட்டம் நடத்தியுள்ளது குறித்து...
பெங்களூரில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் சட்டவிரோதமான முறையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக வெளியான செய்திகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
இதையடுத்து, தில்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரில் உள்ள சுதந்திர பூங்காவில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைமையில் ஞானேஷ் குமாருக்கு எதிராக இன்று (அக்.8) போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
இதில், சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே, நடிகரும் ஆர்வலருமான பிரகாஷ் ராஜ், யூடியூபர் துருவ் ரதி மற்றும் ஏராளமான மாணவர்களும், இளைஞர்களும் கையில் பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பி இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த அக்.2 ஆம் தேதி சிஜேபி தலைமையில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இத்துடன், வரும் அக். 10 ஆம் தேதி சிஜேபி தலைமையில் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டப் பேரணி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
A protest led by the cjp is being held in Bengaluru against CEC Gyanesh Kumar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.