FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!

ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டம் பற்றி...

15 அக்டோபர் 2026, 12:26 pm IST
சென்னையில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் - x
பகிர்:

தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக்கோரி, சென்னையில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் அவர் பதவி விலகக் கோரியும் நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

இந்த நிலையில், ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

காங்கிரஸ் மாநில கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தவெக சார்பில் அமைச்சர் ராஜ்மோகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தியா கூட்டணியிலிருந்து திமுக விலகிய பிறகு, அந்த கூட்டணியின் போராட்டத்தில் தவெக முதல்முறையாக பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

INDIA bloc stages protest in Chennai against Gyanesh Kumar!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments