ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் ரயில் மறியல் போராட்டம்!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் ரயில் மறியல் போராட்டம்...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை எழும்பூரில் ரயில்களை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் ரயில் புறப்படுவதற்கு தாமதமாகியுள்ளது.
Advertisement
Advertisement
"தேர்தல் ஜனநாயகம் ஒளிக்கப்பட்டுவிட்டது. எஸ்ஐஆர் விவகாரத்தில் 13 கோடி பேரின் வாக்காளர்களை நீக்கியதற்காக தலைமைத் தேர்தல் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும். 2024 முதல் நடந்த தேர்தல்களை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
வாக்குத் திருட்டு குறித்து முதல்வர் விஜய் தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் போராடி கைதாகியுள்ள இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்" என்று அந்த அமைப்பினர் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Rail blockade protest in Chennai against Gyanesh Kumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.