கலீல் அகமதுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமதுக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாற்று வீரரை அறிவித்துள்ளது.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமதுக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாற்று வீரரை அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. பிளே ஆஃப் சுற்றுக்கானப் போட்டியில் நீடிப்பதற்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது சிஎஸ்கேவுக்கு மிகவும் முக்கியம்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரர்கள் பலரும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினர். கலீல் அகமது, ஆயுஷ் மாத்ரே, நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன் ஆகியோர் காயம் காரணமாக விலகினர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கலீல் அகமதுக்குப் பதிலாக மிதவேகப் பந்துவீச்சாளரான குல்திப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ரூ. 30 லட்சத்துக்கு சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக குல்திப் யாதவ் அறிமுக வீரராக களமிறங்கினார். அந்த சீசனில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடினார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Chennai Super Kings has announced a replacement player for fast bowler Khaleel Ahmed, who has been ruled out of the IPL tournament due to injury.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.