ஜேமி ஓவர்டனுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள ஜேமி ஓவர்டனுக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்த்துள்ளது.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள ஜேமி ஓவர்டனுக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்த்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை மற்றும் லக்னௌ அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், மற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான போட்டியில் ஈடுபட்டுள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரை தடுமாற்றத்துடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இருப்பினும், சிஎஸ்கே அணி வீரர்கள் காயம் காரணமாக விலகுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைகிறது. ஏற்கனவே, கலீல் அகமது, ஆயுஷ் மாத்ரே, நாதன் எல்லிஸ், ராமகிருஷ்ண கோஷ், எம்.எஸ்.தோனி ஆகியோர் காயம் காரணமாக விளையாடாத நிலையில், அந்த வரிசையில் ஜேமி ஓவர்டனும் இணைந்துள்ளார்.
Advertisement
Advertisement
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து ஜேமி ஓவர்டன் விலகியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஓவர்டன், 14 விக்கெட்டுகள் மற்றும் 136 ரன்கள் எடுத்து சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், காயம் காரணமாக விலகியுள்ள ஜேமி ஓவர்டனுக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டரான டியான் ஃபாரஸ்டரை மாற்று வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்காக கடந்த மார்ச்சில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டியான் ஃபாரஸ்டர் அறிமுகமானார். அவர் இதுவரை 5 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 83 ரன்கள் எடுத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரூ.75 லட்சத்துக்கு டியான் ஃபாரஸ்டர் மாற்று வீரராக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Chennai Super Kings have signed a South African all-rounder as a replacement for Jamie Overton, who has withdrawn from the IPL tournament due to injury.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.