முகப்பு
ஐபிஎல்

தரமான சம்பவம்: ரஸ்ஸலை 11 ஓவர்கள் விளையாட வைத்து பிறகு சாவகாசமாக வெற்றி கண்ட சிஸ்கே!

ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் ரஸ்ஸலைக் கண்டு அஞ்சி நடுங்கும்போது சிஎஸ்கே அணி ரஸ்ஸலை 11 ஓவர்களுக்கும் அதிகமாக பேட்டிங் செய்யவைத்து...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:37 AM
பகிர்:

நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சென்னை ஐபிஎல் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. முதலில் ஆடிய கொல்கத்தா 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்களையே எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்களை எடுத்து வென்றது. ரஸ்ஸல் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். சென்னை  வீரர் சஹார் 3 விக்கெட்டை வீழ்த்தினார்.

ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் ரஸ்ஸலைக் கண்டு அஞ்சி நடுங்கும்போது சிஎஸ்கே அணி ரஸ்ஸலை 11 ஓவர்களுக்கும் அதிகமாக பேட்டிங் செய்யவைத்து பிறகு இலக்கை சாவகாசமாக அடைந்தது. 

நேற்றைய ஆட்டத்துக்கு முன்பு 77 பந்துகளில் 207 ரன்கள் எடுத்திருந்தார் ரஸ்ஸல். 22 சிக்ஸர்கள். ஸ்டிரைக் ரேட் - 268.83. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் சென்னைக்கு எதிராக 44 பந்துகளை எதிர்கொண்ட ரஸ்ஸல் 50 ரன்கள் மட்டுமே எடுத்தார். 3 சிக்ஸர்கள். ஸ்டிரைக் ரேட் 113.63.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்துக்கு முன்பு அதிகபட்சமாக தில்லிக்கு எதிராக அவர் 28 பந்துகளே எதிர்கொண்டார். அதற்கே அவர் 6 சிக்ஸர்களுடன் 62 ரன்களைக் குவித்தார். ஆனால் சென்னையில், சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளமும் அற்புதமான பந்துவீச்சும் ரஸ்ஸலின் கையைக் கட்டிப்போட்டன. விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்த வண்ணம் இருந்தால் சற்று நிதானமாக விளையாடினார்  ரஸ்ஸல். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த பிறகு 8.5-வது ஓவரின்போது களமிறங்கிய ரஸ்ஸல், 20-வது ஓவரின் கடைசிப்பந்துவரை விளையாடினார்.

ரஸ்ஸல்: ஐபிஎல் 2019

vs சன்ரைசர்ஸ் - 49* (19) - 4 சிக்ஸர்

vs பஞ்சாப் - 48 (17) - 5 சிக்ஸர் 

vs தில்லி - 62 (28) - 6 சிக்ஸர் 

vs பெங்களூர் - 48* (13) - 7 சிக்ஸர்

vs சென்னை - 50 (44) - 3 சிக்ஸர்

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது சிஎஸ்கே. 6 ஆட்டங்களில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது சிஎஸ்கே. ஆறு ஆட்டங்கள் விளையாடி சிஎஸ்கே தவிர வேறெந்த அணியும் 5 வெற்றிகளைப் பெறவில்லை. சென்னையைத் தவிர இதர அணிகள் அனைத்தும் குறைந்தது இரண்டு தோல்விகளையாவது அடைந்துள்ளன. 8 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி 2-ம் இடத்தில் உள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 சென்னை  6 5 1 10 +0.310
 கொல்கத்தா 6 4 2 8 +0.614
 பஞ்சாப்  6 4 2 8 -0.061
 ஹைதராபாத்  6 3 3 6 +0.810
 மும்பை 5 3 2 6 +0.342
 தில்லி 6 3 3 6 +0.131
 ராஜஸ்தான் 5 1 4 2 -0.848
 பெங்களூர் 6 0 6 0 -1.453

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.