ஐபிஎல்

'சின்ன தல' ரெய்னா, 'சர்' ஜடேஜா அதிரடியில் சிஎஸ்கே அபார வெற்றி!

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 29-ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Raghavendran

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 29-ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர் கிறிஸ் லின் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 51 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். சிஎஸ்கே சூழல் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஜடேஜா 17 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்களும், அபாரமாக ஆடிய சுரேஷ் ரெய்னா 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 58 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முள்ளம்பன்றி இறைச்சி வைத்திருந்தவா் கைது

கோத்தகிரி அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

வனப் பகுதியில் ட்ரோன் இயக்கியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT