ஐபிஎல்

சிஎஸ்கே சார்பில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு நிதியுதவி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முதல் லீக் போட்டியின் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த ரூ.2 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. 

Raghavendran

2019-ஆம் ஆண்டு நடைபெறும் 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் சனிக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 70 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து ஆடிய சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முதல் லீக் போட்டியின் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த ரூ.2 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. 

மேலும் ஐபிஎல் தொடக்க விழாவுக்கான செலவுத் தொகை ரூ.20 கோடியும் சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சிஆர்பிஎப் அதிகாரிகளிடம்  வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT