மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசன் தொடரில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் சனிக்கிழமை நடந்தது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐபிஎல் வெளியிட்ட அறிக்கையில்,
குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசாத காரணத்தால் (ஸ்லோ ஓவர் ரேட்) மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இது மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் தவறாக இருப்பதால், ஐபிஎல் விதிகளின் அடிப்படையில் அணியின் கேப்டனுக்கு தண்டனையாக அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.