ஐபிஎல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக ரஹானே மீண்டும் நியமனம்!

ஐபிஎல் போட்டியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் விலகியதிலிருந்து ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரஹானே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்...

எழில்

ஐபிஎல் போட்டியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் விலகியதிலிருந்து ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரஹானே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் 8 ஆட்டங்களில் 6-ல் தோல்வியடைந்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவி ரஹானேவிடமிருந்து ஸ்டீவ் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து ராஜஸ்தான் அணி நிர்வாகம் எதிர்பார்த்த திருப்பமும் ஏற்பட்டது. 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி. இதனால் பிளேஆஃப்புக்கான போட்டியில் ராஜஸ்தான் அணியும் தற்போது உள்ளது. 

உலகக் கோப்பைப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியுள்ளார் ஸ்மித். இதையடுத்து லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரஹானே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

கேப்டன் பதவியை ரஹானே ஏற்றுக்கொண்டதில் பெருமையடைகிறோம். அவர் இதை மறுத்துவிட்டு, பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்துவதாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் அணியின் மீதான ஈடுபாட்டால் அவர் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். அவரைப் போன்ற ஒரு வீரரைப் பெற்றிருப்பதில் பெருமையடைகிறோம் என்று கூறியுள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை நிர்வாகியான ஜுபின் பரூச்சா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT