முகப்பு
ஐபிஎல்

டி காக், சூர்யகுமார் அதிரடி அரைசதம்: தில்லியை வீழ்த்தியது மும்பை

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்த மும்பை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்

டி காக், சூர்யகுமார் அதிரடி அரைசதம்: தில்லியை வீழ்த்தியது மும்பை

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்த மும்பை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:


தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்த மும்பை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-வது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த தில்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் களமிறங்கினர். திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் 12 பந்துகளுக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்து அக்சர் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, டி காக் மற்றும் சூர்யகுமார் யாதவ் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இந்த இணை விக்கெட்டையும் பாதுகாத்து, ரன் ரேட்டையும் உயர்த்தி தில்லிக்கே அழுத்தம் தந்து வந்தது. சூர்யகுமார் ஒத்துழைக்க, ரன் குவிப்பில் ஆதிக்கம் செலுத்தி வந்த டி காக் 33-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். ஆனால், அடுத்த ஓவரிலேயே 53 ரன்களுக்கு அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, இஷான் கிஷன் ஒத்துழைப்புத் தர சூர்யகுமார் ரன் குவிப்பில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் மும்பை கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதன்மூலம், சூர்யகுமார் 30-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். ஆனால், அதே ஓவரில் 53 ரன்களுக்கு ரபாடாவிடம் ஆட்டமிழந்தார் சூர்யகுமார். அடுத்து களமிறங்கிய ஹார்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க ஆட்டத்தில் லேசான பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் 28 பந்துகளுக்கு 33 ரன்கள் மட்டுமே தேவை என்று இருந்ததால், தில்லிக்கே அதிக அழுத்தம் இருந்தது. கிஷனும், போலார்டும் ஓவருக்கு ஒரு பவுண்டரி அடிக்க கடைசி 3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது.

ரபாடா வீசிய 18-வது ஓவரில் கிஷன் சிக்ஸர் அடிக்க 16 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது. ஆனால், அடுத்த பந்திலேயே கிஷன் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, கடைசி 2 ஓவர்களில் 10 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் போலார்ட், க்ருணால் பாண்டியா இருந்தனர். 19-வது ஓவரை நோர்க்கியா வீசினார். சிறப்பாக வீசிய அவர் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து கட்டுப்படுத்தினார். 

இதனால், கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. ஸ்டாய்னிஸ் வீசிய முதல் பந்தையே பாண்டியா பவுண்டரிக்கு விரட்டினார். இதனால், கடைசி 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே தேவை என்று எளிதானது. அடுத்த 2 பந்துகளில் 2 ரன்கள் எடுக்க, 4-வது பந்தை மீண்டும் பவுண்டரிக்கு விரட்டினார் பாண்டியா. 

இதன்மூலம், 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்த மும்பை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தில்லி அணித் தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளையும், அக்சர், அஸ்வின் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →