முகப்பு
கோப்புப்படம்
ஐபிஎல்

ஹைதராபாத்திடமிருந்து வெற்றியைப் பறித்த பராக், தெவாதியா

​சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்

ஹைதராபாத்திடமிருந்து வெற்றியைப் பறித்த பராக், தெவாதியா

​சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
கோப்புப்படம்
பகிர்:


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13-வது ஐபிஎல் சீசனின் 26-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

159 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் களமிறக்கப்பட்டனர். ஸ்டோக்ஸ் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்மித் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் பட்லரும் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 5 ஓவர்களுக்குள் 3 முக்கிய வெளிநாட்டு வீரர்களை இழந்து ராஜஸ்தான் திணறியது.

இதையடுத்து, சாம்சனுடன் இணைந்து உத்தப்பா சிறிய பாட்னர்ஷிப்பை அமைத்தார். ஆனால், 18 ரன்கள் மட்டுமே எடுத்து அவரும் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, சஞ்சு சாம்சனும் ரஷித் கான் சுழலில் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணி 78 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ரியான் பராக் மற்றும் ராகுல் தெவாதியா பாட்னர்ஷிப் அமைத்து நிதானம் காட்டி வந்தனர். விக்கெட்டுகள் விழாதபோதிலும் கடைசி 5 ஓவர்களில் 65 ரன்கள் தேவை என்ற கடினமான நிலை உருவானது. 

16-வது ஓவரில் 1 சிக்ஸர் உள்பட 11 ரன்கள் கிடைக்க, 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவைப்பட்டன. இந்த நிலையில், 17-வது ஓவரை சந்தீப் சர்மா வீசினார். இந்த ஓவரில் தெவாதியா 1 சிக்ஸரும், பராக் 2 பவுண்டரிகளும் அடிக்க 18 ரன்கள் கிடைத்தன. கடைசி 3 ஓவர்களில் 36 ரன்கள் தேவைப்பட்டன.

18-வது ஓவரை ரஷித் கான் வீச அந்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அசத்தினார் தெவாதியா. இதனால், கடைசி 2 ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. 19-வது ஓவரை நட்ராஜன் வீச அதிலும் 1 சிக்ஸர், பவுண்டரி அடித்து மிரட்டினார் தெவாதியா. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. முதல் 4 பந்துகளில் 6 ரன்கள் கிடைக்க, கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டன. கலீல் அகமது புல்டாசாக வீச அதை சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் பராக்.

இதன்மூலம், 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தெவாதியா 28 பந்துகளில் 45 ரன்களுடனும், பராக் 26 பந்துகளில் 42 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →