தொடர் தோல்விகளால் யுக்தியை மாற்றும் தோனி!
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிறைய ஓட்டைகள் இருப்பதாக கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்தொடர் தோல்விகளால் யுக்தியை மாற்றும் தோனி!
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிறைய ஓட்டைகள் இருப்பதாக கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிறைய ஓட்டைகள் இருப்பதாக கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்-இன் நேற்றைய (சனிக்கிழமை) 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நடப்பு சீசனில் இது 5-வது தோல்வியாகும்.
இந்தத் தோல்வி குறித்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் தோனி தெரிவித்ததாவது:
"கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன. ஒரு ஓட்டையை அடைத்தால், மற்றொரு ஓட்டை வழியாக தண்ணீர் வருகிறது. நாங்கள் அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து வெளிப்படுத்த வேண்டும். வெற்றிகள் கிடைக்க அனைத்தையும் ஒரே ஆட்டத்தில் செயல்படுத்த வேண்டும். எங்களுக்கு சாதகமான முடிவு கிடைத்துவிட்டால், கொஞ்சம் மாறுதலாக இருக்கும்.
பேட்டிங் பிரச்னைக்குரியதாக உள்ளது. இந்த ஆட்டத்திலும் அது வெளிப்பட்டுவிட்டது. இதற்கு ஏதேனும் செய்தாக வேண்டும். ஒரே விஷயம்தான் திரும்பத் திரும்ப நடக்கிறது. நபர்கள் மட்டுமே மாறுபடுகிறது.
ஆட்டமிழந்தாலும் பரவாயில்லை என்று பெரிய ஷாட்களை ஆட வேண்டும். காரணம், 15 அல்லது 16-வது ஓவரில் வெற்றிக்கு நிறைய ரன்களை வைத்திருக்கக் கூடாது. பின்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு இது நிறைய அழுத்தங்களைத் தருகிறது.
6 முதல் 14 ஓவர்கள் வரை வீசும் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ப சூழலுக்கு பொருத்தியும், திட்டம் வகுக்கவும் முடியவில்லை.
பந்துவீச்சில் கடைசி 4 ஓவர்கள் திட்டமிட்டபடி போகவில்லை. அதுவரை பந்துவீச்சாளர்கள் மிகவும் பிரமாதமாகப் பந்துவீசினர். இன்னிங்ஸை சிறப்பாக முடிக்க வேண்டும். பந்துவீச்சைப் பொறுத்தவரை எதிரணியைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். ஆனால், முதல் 6 ஓவர்கள் அல்லது கடைசி 4 ஓவர்களில் நிறைய ரன்களைக் கொடுக்கிறோம்.
ஆனால், எங்களுடைய பெரிய பிரச்னையே பேட்டிங்கில்தான் உள்ளது. நாங்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. வரும் ஆட்டங்களில் நாங்கள் சற்று கூடுதலாக வெளிப்படுவோம். கடைசி ஓவர் வரை விக்கெட்டுகளை வைத்திருப்பதைவிட, அதிரடியாக விளையாடி 17-வது ஓவரில் முடித்துவிடலாம்."
பொதுவாக ஆட்டத்தைக் கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்றால் வெற்றிக்கு வாய்ப்பு உள்ளது என்பதுவே தோனியின் யுக்தியாக இருந்திருக்கிறது. இந்த யுக்தியின் மூலம் பல்வேறு ஆட்டங்களில் வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். ஆனால், இந்த சீசனில் தொடர் தோல்விகளால், யுக்தியை மாற்ற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார் தோனி.
சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை எதிர்கொள்கிறது.