தில்லி கேபிடல்ஸ் மேலும் ஒரு வீரரை இழந்தது!
13-வது ஐபிஎல் சீசனிலிருந்து தில்லி கேபிடல்ஸ் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஐபிஎல்தில்லி கேபிடல்ஸ் மேலும் ஒரு வீரரை இழந்தது!
13-வது ஐபிஎல் சீசனிலிருந்து தில்லி கேபிடல்ஸ் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.
13-வது ஐபிஎல் சீசனிலிருந்து தில்லி கேபிடல்ஸ் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.
தில்லி கேபிடல்ஸ் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடப்பு சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும்தான் இஷாந்த் சர்மா விளையாடினார். அக்டோபர் 7-ம் தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தில்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தில்லியிலிருந்து ஏற்கெனவே அமித் மிஸ்ரா காயம் காரணமாக நடப்பு சீசனிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இறுதியில் இந்தியக் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதற்கு முன்பாக அவர் காயத்திலிருந்து மீள்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.