முகப்பு
ஐபிஎல்

'நான் முன்கூட்டியே ஆட்டமிழந்திருக்கலாம்': டி வில்லியர்ஸ் ஆட்டத்தைக் கண்டு பின்ச் கருத்து

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்துள்ளது.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, 13-வது ஓவரில் டி வில்லியர்ஸ் களமிறங்கினார். 7 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்த நிலை என்றாலும் 33 பந்துகளை எதிர்கொண்ட அவர் 73 ரன்கள் குவித்தார்.

இந்த அதிரடியால் 13-வது ஓவரில் 7.6 ஆக இருந்த ரன் ரேட், 20 ஓவர்கள் முடிவில் 9.7 ஆக உயர்ந்தது.

பெங்களூரு பேட்டிங்குக்குப் பிறகு வர்ணணையாளர்கள் பின்ச்சிடம் கலந்துரையாடினர்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

"டி வில்லியர்ஸ் சிறந்த பேட்ஸ்மேன். தனது சிறப்பான ஆட்டத்தின்மூலம்,  எளிதான ஆடுகளம் என்பது போன்ற தோற்றத்தை அளித்துவிடுவார். நான் முன்கூட்டியே ஆட்டமிழந்திருக்கலாம். ஒரு கட்டத்தில் இந்த மைதானத்தில் 180 ரன்கள் எடுத்தால் நல்ல ஸ்கோர் என்று எண்ணிணோம். தற்போது 194 ரன்கள் எடுத்துள்ளோம்."
 
முழு கட்டுரையைப் படிக்க →