முகப்பு
ஐபிஎல்

ஓய்விலிருந்து வெளியே வாருங்கள்: டி வில்லியர்ஸுக்கு ரவி சாஸ்திரி கோரிக்கை

நீங்கள் ஓய்விலிருந்து வெளியே வரவேண்டும். இதனால் கிரிக்கெட்டுக்கு மேலும் பல நன்மைகள்...

ஐபிஎல்

ஓய்விலிருந்து வெளியே வாருங்கள்: டி வில்லியர்ஸுக்கு ரவி சாஸ்திரி கோரிக்கை

நீங்கள் ஓய்விலிருந்து வெளியே வரவேண்டும். இதனால் கிரிக்கெட்டுக்கு மேலும் பல நன்மைகள்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேனும் ஆர்சிபி அணி வீரருமான டி வில்லியர்ஸ், ஓய்விலிருந்து வெளியே வர வேண்டும் என இந்தியப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 28-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வென்றது. இந்த ஆட்டத்தில் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் விரைவாக ரன்கள் எடுக்கத் திணறியபோது ஆர்சிபி வீரர் டி வில்லியர்ஸ் மட்டும் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் குவித்தார். 

டி வில்லியர்ஸின் இந்த ஆட்டம் பற்றி இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:

நேற்று இரவில் பார்த்த ஆட்டம் நம்பமுடியாதது. இந்தக் கடினமான சூழலில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு டி வில்லியர்ஸ் தேவை. நீங்கள் ஓய்விலிருந்து வெளியே வரவேண்டும். இதனால் கிரிக்கெட்டுக்கு மேலும் பல நன்மைகள் கிடைக்கும் என்றார். 

கடந்த வருடம் மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, டி20 போட்டிகளில் விளையாடி வரும் டி வில்லியர்ஸை மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற வைத்து, டி20 உலகக் கோப்பையில் விளையாட வைக்கும் முயற்சிகள்  நடைபெற்று வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →