ஐபிஎல்

ஐபிஎல்: அமித் மிஸ்ராவுக்குப் பதிலாக புதிய வீரரைத் தேர்வு செய்தது தில்லி அணி

இதுவரை 14 உள்ளூர் டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள பிரவீன் டுபே, 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபை, அபுதாபி, ஷாா்ஜா ஆகிய மைதானங்களில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி நவம்பா் 10 அன்று நிறைவுபெறுகிறது.

ஐபிஎல் போட்டியிலிருந்து காயம் காரணமாக தில்லி கேபிடல்ஸ் அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா விலகியுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிதிஷ் ராணா கொடுத்த கேட்சைத் தனது பந்துவீச்சின் போது பிடிக்க முயன்றார் மிஸ்ரா. அப்போது அவருடைய விரல்களில் காயம் ஏற்பட்டது.

37 வயது மிஸ்ரா, இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடிய மூன்று ஆட்டங்களில் 0/23, 2/35, 1/14 எனச் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார்.

இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மிஸ்ரா கூறியதாவது:

இந்தக் காயம் இவ்வளவு தீவிரமாகும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஓரிரு ஆட்டங்களில் மட்டும் தான் விளையாட முடியாமல் போகும் என நினைத்தேன். இருந்தாலும் இந்த முடிவை நான் ஏற்றுக்கொண்டாக வேண்டும். கேட்ச் பிடிக்கச் சென்றபோதுதான் காயம் ஏற்பட்டது. உடற்தகுதி காரணமாக உண்டான காயம் அல்ல என்றார். 

இந்நிலையில் அமித் மிஸ்ராவுக்குப் பதிலாக மற்றொரு லெக் ஸ்பின்னரான கர்நாடகாவைச் சேர்ந்த 27 வயது பிரவீன் டுபேவை தில்லி அணி தேர்வு செய்துள்ளது. இதுவரை 14 உள்ளூர் டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள பிரவீன் டுபே, 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எகானமி - 6.87.

புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது தில்லி கேபிடல்ஸ் அணி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை எதிரொலி: பெரும் போராட்டம் வெடித்தது!

விழிகளில் ஒரு வானவில்... ஸ்ரீலீலா!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிஆர்எஸ் கட்சியும் புறக்கணிப்பு!

ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

ஓவியம்... நந்திதா ஸ்வேதா!

SCROLL FOR NEXT