முகப்பு
கோப்புப்படம்
ஐபிஎல்

200 ஐபிஎல் ஆட்டங்கள்: சாதனை படைத்தார் தோனி!

200-வது ஐபிஎல் ஆட்டத்தில் களமிறங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல்

200 ஐபிஎல் ஆட்டங்கள்: சாதனை படைத்தார் தோனி!

200-வது ஐபிஎல் ஆட்டத்தில் களமிறங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி சாதனை படைத்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
கோப்புப்படம்
பகிர்:

200-வது ஐபிஎல் ஆட்டத்தில் களமிறங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி சாதனை படைத்துள்ளார்.

200-வது ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடும் முதல் வீரர் தோனி.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் களமிறங்கியதன் மூலம் தோனி இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

2008-இல் தொடங்கிய முதல் ஐபிஎல் சீசனிலிருந்து தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இடையில் சென்னை சூப்பர் கிங்ஸுக்குத் தடை விதிக்கப்பட்டதால் 2016 மற்றும் 2017 ஐபிஎல்-இல் புணே அணிக்காகக் களமிறங்கினார் தோனி.

தோனிக்கு அடுத்தபடியாக அதிக ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியவராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளார். அவர் இதுவரை 197 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

200-வது ஐபிஎல் ஆட்டத்தில் தோனி களமிறங்கியதற்கு சக சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா சுட்டுரையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →